செய்திகள்
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் சாந்தா பார்வையிட்டபோது எடுத்தபடம்.

திருவாரூர் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் சாந்தா ஆய்வு

Published On 2021-01-13 09:37 GMT   |   Update On 2021-01-13 09:37 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி, கூடுர், பாலையூர் ஆகிய பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.

இதுபோன்ற நிலையிலுள்ள நெற்பயிர் பரப்புகள் வேளாண்மை துறையினர் மூலமாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரினை உடனடியாக வெளியேற்ற தேவையான வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை அலுவலர்கள் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி, கச்சனம், கள்ளிக்குடி, கீழபாண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மைதுறை துணை இயக்குனர் உத்திராபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, துணை வேளாண்மை அலுவலர் காத்தையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News