செய்திகள்
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

Published On 2021-02-27 00:50 GMT   |   Update On 2021-02-27 00:50 GMT
19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
சென்னை:

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் இன்று (சனிக்கிழமை) காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியபடி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News