ஆட்டோமொபைல்
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

இன்னோவா க்ரிஸ்டா விலையை உயர்த்திய டொயோட்டா

Published On 2021-07-30 07:11 GMT   |   Update On 2021-07-30 07:11 GMT
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.


டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இம்முறை இன்னோவா மாடல் விலை 2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா மாடலின் புதிய விலை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என டொயோட்டா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல்- GX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 16.11 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



2021 இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 164 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

டீசல் என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News