உள்ளூர் செய்திகள்
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோர பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளை வனத்துறையினர் பார்வையிட்டனர்.

தனுஷ்கோடி கடலோர பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

Published On 2022-01-28 04:27 GMT   |   Update On 2022-01-28 04:27 GMT
தனுஷ்கோடி கடலோர பகுதியில் இந்த வருடம் ஆமைகள் முட்டையிடும் காலம் 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா பகுதியான மண்டபம் சரகத்தில் புதுரோடு முதல் அரிச்சல்முனை வரை கடல் ஆமைகள் முட்டை இடும் காலம் தற்போது தொடங்கி உள்ளது.

நேற்று முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப்பகுதியில் 2 குழிகளில் சுமார் 244 ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அவை ராமேசுவரம் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

தனுஷ்கோடி கடலோர பகுதியில் இந்த வருடம் ஆமைகள் முட்டையிடும் காலம் 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. இது பொதுவாக கடந்த 4 வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 15 தினங்கள் தாமதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் கடல் சீற்றம், நீரோட்டம், கடல் தட்ப வெட்பம் போன்ற காரணங்களே என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காப்பகத்தில் ஆமை முட்டைகள் பொரிக்கப்பட்டு பின்னர் கடலில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News