தொழில்நுட்பம்
பிளாக்பெரி ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஒஎஸ் உடன் பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2021-02-16 06:41 GMT   |   Update On 2021-02-16 06:41 GMT
ஹார்டுவேர் கீபோர்டு கொண்ட பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் இந்த ஆண்டு பிளாக்பெரி பிராண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய போவதாக கடந்த ஆண்டே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் பிரான்க்ளின் புது பிளாக்பெரி மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஹார்டுவேர் கீபோர்டு மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். பிளாக்பெரியின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்க ஆன்வார்டு மொபிலிட்டி நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

முதற்கட்டமாக 5ஜி பிளாக்பெரி ஸ்மார்ட்போன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஆசிய சந்தைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி ஆன்வார்டு மொபிலிட்டி இதுவரை உறுதியான விவரங்களை வழங்கவில்லை.



அந்த வகையில் இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக்பெரியின் புகழ்பெற்ற பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெரி 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்வார்டு மொபிலிட்டி 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஆகும். இது தலைசிறந்த பாதுகாப்பு கொண்ட மொபைல் மென்பொருள் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியான பிரான்க்ளின் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். 
Tags:    

Similar News