செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கம்பம் அருகே வீடுகளில் புகுந்து பணம்- பொருட்கள் திருட்டு

Published On 2019-09-11 08:49 GMT   |   Update On 2019-09-11 08:49 GMT
கம்பம் அருகே 2 வீடுகளில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து திருடும் சத்தம் கேட்டது. உடனடியாக எழுந்த பழனிச்சாமி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் பால்பாண்டி (வயது 21) என தெரிய வந்தது. அவனிடம் இருந்து வீட்டில் திருடிய பணம் ரூ.2700 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் பால்பாண்டியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கம்பம் பாரஸ்ட் ஆபீஸ் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் நாகபிரதீப். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி (வயது 26). இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் சின்னமனூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் தாழ்ப்பாள் திறக்கப்பட்டு உள்ளே இருந்த அண்டா, பித்தளைப்பானை குத்து விளக்கு, குடம், ஆகிய பொருட்களும் உண்டியலில் வைத்திருந்த பணம் ரூ.2 ஆயிரமும் திருடு போயிருந்தது.

இது குறித்து மாரீஸ்வரி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி வைரவன் மகன் ஆனந்த் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News