செய்திகள்
காரைக்குடியில் இருந்து மதுரைக்கு நேற்று முதல் இயக்கப்பட்ட அரசு விரைவு குளிர்சாதன பஸ்சை படத்தில் காணலாம்.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட அரசு குளிர் சாதன பஸ்கள் இயங்க தொடங்கின

Published On 2021-02-20 14:16 GMT   |   Update On 2021-02-20 14:16 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர் சாதன பஸ்கள் நேற்று முதல் இயங்க தொடங்கின.
காரைக்குடி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 8 மாதம் காலம் வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளன. கடந்த 11 மாதங்களாக குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பித்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை முதல் குளிர்சாதன பஸ்களை சுத்தம் செய்து பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், பஸ்சை இயக்கி பார்த்து பழுதுகளை சரி செய்யுப்பட்டது. அதன் பின்னர் பணிமனையில் இருந்து பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இயக்கப்பட்டது. காரைக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கும், காரைக்குடியில் இருந்து மதுரைக்கும் தலா 3 முறை குளிர் சாதன விரைவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்தவர்களே பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 11 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் அரசு விரைவு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News