செய்திகள்
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் புதிய புத்தக பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு 7 ஆயிரம் புதிய புத்தகங்கள்

Published On 2019-09-11 17:59 GMT   |   Update On 2019-09-11 17:59 GMT
கரூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு 7 ஆயிரம் புதிய புத்தகங்கள் வந்துள்ளது.
கரூர்:

நூலகம் அறிவை வளர்க்கும் ஒரு இடமாகும். நாட்டில் கிராமம் முதல் நகர்ப்புறங்கள் வரை நூலகங்கள் உள்ளது. நூலகத்தில் அறிவாற்றலை அதிகரிக்க முடியும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், மேற்கோள் நூல்கள், மனோதத்துவம், நாளிதழ்கள், இதழ்கள் உள்ளிட்டவை அனைத்தும் ஒரே இடத்தில் பெற முடியும். நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் நூலகத்தின் சிறப்பு என்றும் குறையாது. நூலகத்திற்கு வழக்கமாக செல்வதை கடைப்பிடிப்பவர்கள் தற்போதும் சென்று கொண்டிருக்கிறார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் படித்து கொண்டே தான் இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட மைய நூலகம் ஒன்றும், 34 கிளை நூலகங்களும், 57 ஊர்ப்புற நூலகங்களும், 11 பகுதி நேர நூலகங்களும் என மொத்தம் 103 நூலகங்கள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் வாசகர்களாக உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நூலகங்ளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை புதிய புத்தகங்கள் வாங்கி வைக்கப்படும். பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படும் புத்தகங்கள் வாசகர்களுக்கு கிடைக்கும் வகையில் புத்தகங்களை மொத்தமாக வாங்கி நூலகங்களில் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்ட நூலகங்களுக்கு தமிழ், ஆங்கில நூல்கள் வெவ்வேறு தலைப்புகளில் என மொத்தம் 7 ஆயிரம் புதிய புத்தகங்கள் வந்துள்ளன. இந்த புத்தகங்கள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மைய நூலகத்தில் இருந்து அந்தந்த நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக முடிவடையும் என நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News