ஆன்மிகம்
திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள்

திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது

Published On 2020-12-24 06:59 GMT   |   Update On 2020-12-24 06:59 GMT
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிவில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில் வைணவத் தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். இங்கு நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பெருமாள் காட்சியளிக்கிறார். அரையருக்கு மோட்சம் தந்த தலம் என்ற சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன் திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. பகல் பத்து, ராப்பத்து என நடைபெறும் திருவிழாவில் 9-ம் திருநாளான நேற்று வேதநாராயண பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மோகினி அலங்காரம் நடைபெறுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதுவரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகையா மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News