ஆன்மிகம்
கங்கையம்மன்

ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா

Published On 2020-12-10 05:42 GMT   |   Update On 2020-12-10 05:42 GMT
ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா நடந்தது. மஞ்சளால் செய்த ஏழு கங்கையம்மன்களை ஊர்வலமாக கொண்டு சென்று ஏழு வீதிகளில் எழுந்தருள செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை ஏழு கங்கையம்மன் கோவிலில் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் மஞ்சளால் செய்த ஏழு கங்கையம்மன்களை ஊர்வலமாக கொண்டு சென்று ஏழு வீதிகளில் எழுந்தருள செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் பொன்னாலம்மன், காந்தி வீதியில் அங்கம்மா, கொத்தபேட்டையில் புவனேஸ்வரியம்மன், சன்னதி வீதியில் கருப்பு கங்கையம்மன், தேர்வீதியில் அங்காளம்மன், ஜெயராம்ராவ் வீதியில் முத்தியாலம்மன், பேரிவாரி மண்டபம் அருகில் எல்லையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மன்களை வழிபட்டனர். உற்சவர் அம்மன்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படவில்லை.

விழாவில் பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News