ஆன்மிகம்
கொண்டத்து காளியம்மன்

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம், தேர்திருவிழா ரத்து

Published On 2020-12-21 05:59 GMT   |   Update On 2020-12-21 05:59 GMT
கொண்டத்து காளியம்மன் கோவிலில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த பூச்சாட்டுதல், குண்டம், தேர்த்திருவிழா மற்றும் அம்மன் மலர் பல்லக்கில் கோபிக்கு எழுந்தருழுதல் நிகழ்ச்சி ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து க்காளியம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம், தேர்த்திருவிழா, மலர் பல்லக்கில் அம்மன் கோபிக்கு எழுந்தருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த விழாக்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

இதற்காக டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிந்து குண்டம் மிதிப்பதற்காக விரதம் இருப்பார்கள்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த பூச்சாட்டுதல், குண்டம், தேர்த்திருவிழா மற்றும் அம்மன் மலர் பல்லக்கில் கோபிக்கு எழுந்தருழுதல் நிகழ்ச்சி ஆகியவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்த ஆண்டு பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நடைபெற இருந்த வருடாந்திர திருவிழா எதுவும் நடைபெறாது. இதனால், ஆண்டு தோறும் விரதமிருந்து குண்டம் இறங்கும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News