செய்திகள்
டிகே சிவக்குமார்

கொரோனாவை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இலாகா மாற்றமே சாட்சி: காங்கிரஸ்

Published On 2020-10-13 02:25 GMT   |   Update On 2020-10-13 02:25 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசின் தோல்விக்கு அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி ஆகும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபையில் நேற்று 3 மந்திரிகளின் இலாகாக்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி, கொரோனாவை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இலாகா மாற்றமே சாட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசின் தோல்விக்கு இன்று (அதாவது நேற்று) அரசு மேற்கொண்டுள்ள மந்திரிகளின் இலாகா மாற்றமே ஒரு சாட்சி ஆகும். சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளது, எங்களின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அதாவது அரசின் திறனற்ற நடவடிக்கைகளால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News