செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு

Published On 2019-09-21 07:06 GMT   |   Update On 2019-09-21 08:02 GMT
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது. எனவே,  மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 8.94 கோடி வாக்காளர்களும், அரியானாவில் 1.80 கோடி வாக்காளர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவுக்கு 2 சிறப்பு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளக்கு பயிற்சி தொடங்குகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்று திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இரு மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News