ஆன்மிகம்
புருஷாமிருக வாகனத்தில் உற்சவர்களான சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா: புருஷாமிருக வாகனத்தில் சோமஸ்கந்தர்-காமாட்சி

Published On 2021-03-13 04:53 GMT   |   Update On 2021-03-13 04:53 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் புருஷாமிருக வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை புருஷாமிருக வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளினர்.

புருஷாமிருக வாகனம் சிவன் கோவில்களில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு அபூர்வ வாகனம். இந்த வாகனத்தில் காணப்படும் உருவம் சிங்கம் போன்ற ஒரு மிருகத்தின் உடலும், மனிதனுடைய தலையும், கைகளையும் கொண்டது.

இந்த மிருகத்தின் கதையை பற்றி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுதிஷ்டிரர் ஒரு யாகத்துக்கு புருஷாமிருகத்தை அழைக்குமாறு பீமனிடம் கூறுகிறார். பீமனுக்கு இரு கோரிக்கைகளை விடுக்கிறது புருஷாமிருகம். இது, அம்மிருகத்தின் முன்னால் பீமன் செல்ல வேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே நான்கு காத தூரம் (4 மைல்கள்) இருக்க வேண்டும் என்பது தான் புருஷா மிருகத்தின் எச்சரிக்கை. இதை மீறினால் அம்மிருகம் பீமனை உண்டு விடும்.

அவர்கள் பயணத்தைத் தொடங்கியதும், பீமன் தமக்கிடையே உள்ள தொலைவை கணிப்பதற்காக அவ்வபோது ஒருகல்லை எறிய, அது உடனே ஒரு சிவலிங்கமாக மாறியது. அம்மிருகம் சிவ பூஜை செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் கால தாமதம் செய்தது. அப்போது அவர்களுக்கு இடையே இருந்த தொலைவு குறைந்தது. அம்மிருகம் தன் எல்லைக்குள் உள்ள பீமனின் உடலை தான் உண்ண வேண்டும் என்றது.

அவர்கள், புருஷாமிருகத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக கூற, புருஷாமிருகம் பீமனின் உடலில் உள்ள பாகத்தை தின்றது. பீமன் இறந்தான். யுதிஷ்டிரர் அளித்த பாரபட்ச மற்ற நியாயத்தை மெச்சி தனது கோரிக்கையை கைவிட்டு விடுகிறது புருஷாமிருகம். சிவன் மீது பக்தி செலுத்திய புருஷாமிருகத்தை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், திருச்சி வாகன செவை நடந்தது.
Tags:    

Similar News