ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி 4-வது நாள் அலங்காரம்

Published On 2021-10-11 06:08 GMT   |   Update On 2021-10-11 06:08 GMT
ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி 4-ம் நாள் விழாவில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி அளித்தார்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாள் ஒவ்வொரு அவதாரத்தில் வருகின்ற 14-ந் தேதி வரையிலும் ஒன்பது நாட்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நவராத்திரி திருவிழாவின் 4-வது நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேஸ்வரம் கோவிலோடு சேர்ந்த உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவில் அருகே வைத்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை இந்த 3 நாட்களை தவிர்த்து வழக்கம்போல் மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் கொலு மண்டபத்தில் நடைபெறும் அம்பாள் பூஜைகளை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
Tags:    

Similar News