சமையல்
கறிவேப்பிலை பொடி இட்லி

கல்லீரல் பிரச்சனைகளை போக்கும் கறிவேப்பிலை பொடி இட்லி

Published On 2022-04-26 05:45 GMT   |   Update On 2022-04-26 05:45 GMT
கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலையின் பொடியையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
தேவையான பொருட்கள் :

மினி இட்லி - 20
நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

அரைக்க :

கறிவேப்பிலை - 2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டேபிள்ஸ்பூன்

தாளிக்க  :

கடுகு - சிறிதளவு,
உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

Tags:    

Similar News