செய்திகள்
ஆர்.என். ரவி

உயர்கல்வி நிறுவன செயலாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை

Published On 2021-10-29 09:00 GMT   |   Update On 2021-10-29 11:08 GMT
தமிழக ஆளுநராக பதவி ஏற்றபிறகு முதன்முறையாக துறைசார்ந்த செயலாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆர்.என். ரவி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக கவர்னராக ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் 18-ந்தேதி பதவி ஏற்றார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் நாகாலாந்து மாநிலத்தில் இதற்கு முன்பு கவர்னராக பணியாற்றினார். கடந்த  வாரம் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

டெல்லியில் இருந்து வந்த உடன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதினார்.

கவர்னரின் சார்பில் அவரது செயலாளர் எழுதி உள்ள அந்த கடிதத்தை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த கடிதம் விவகாரத்தை அரசியல் சர்ச்சையாக்கிய நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் நாளை (அக். 30-ந்தேதி) உயர்கல்வி நிறுவன செயலாளர்கள், அனைத்து பல்லைக்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் கவர்னர் ஆர்.என். ரவி. பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய தேவைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

கவர்னராக பதவி ஏற்றபின், முதன்முறையாக துறைசார்ந்த செயலாளர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்துகிறார்.
Tags:    

Similar News