செய்திகள்
திருமூர்த்தி அணை

கடைமடையை அடைந்த திருமூர்த்தி அணை தண்ணீர்-விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-08-09 08:02 GMT   |   Update On 2021-08-09 08:02 GMT
முதலில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கழிவுகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. பின் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
திருப்பூர்:

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்காக ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு குடிமராமத்து பணி நடக்காததால்  கால்வாயில் வழியெங்கும் கழிவுகள் நிரம்பி கிடக்கிறது. தண்ணீரின் வேகத்தில் அவை அடித்துவரப்பட்டு பல்வேறு இடங்களில் தேங்கி தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.

இந்தநிலையில் முதலில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு கழிவுகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. பின் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்  கடைமடையை எட்டியுள்ளது.

மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், கடைமடையை  அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News