பெண்கள் மருத்துவம்
மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க...

மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க...

Published On 2021-12-21 07:29 GMT   |   Update On 2021-12-21 07:29 GMT
மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
* ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.

* உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

* மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.

* மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்'. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.

* அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும். வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
Tags:    

Similar News