செய்திகள்
கோப்புபடம்

உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

Published On 2021-09-23 05:59 GMT   |   Update On 2021-09-23 05:59 GMT
வருகிற 25-ந் தேதி வரை ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் ‘மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி நடத்தப்படுகிறது.
அவிநாசி:

வட கிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள சேதத்தை தவிர்க்கவும், தேங்கி நிற்கும் மழைநீர், கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவுவதை தவிர்க்கவும் மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தம் செய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி வரை ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் ‘மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி நடத்தப்படுகிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால், கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்து மழைநீர் தடையின்றி வழிந்தோடி செல்வதற்கான பணிகளை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை பணி மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்பணிகளில், உள்ளாட்சிகளில் பணிபுரியும்  தூய்மைப் பணியாளர்களை முழு அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு பணியின் போது தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News