ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்

Published On 2020-07-06 05:42 GMT   |   Update On 2020-07-06 05:42 GMT
இந்திய சந்தையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மே மாதத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் முற்றிலும் முடங்கியிருந்த ஆட்டோமொபைல் துறை மே மாதத்தில் மீண்டும் பணிகளை படிப்படியாக துவங்கின.

அந்த வகையில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் விற்பனையும் துவங்கப்பட்டது. மே மாதத்தில் முதல் முறை விற்பனை துவங்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் அதே மாதத்தில் மட்டும் 3121 யூனிட்களை விற்பனை ஆனது. இது மே மாதத்தில் மற்ற நிறுவனங்களின் எஸ்யுவி விற்பனையை விட அதிகம் ஆகும்.



கிரெட்டா மாடலுக்கு போட்டியாளரான கியா செல்டோஸ் மே மாதத்தில் 1611 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத விற்பனையிலும் ஹூண்டாய் கிரெட்டா 7202 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் 7114 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிக விற்பனை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதும், கியா செல்டோஸ் விற்பனை 342 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
Tags:    

Similar News