ஆன்மிகம்
சாத்தான்குளம் முத்துமாரியம்மன் கோவில் விழா

சாத்தான்குளம் முத்துமாரியம்மன் கோவில் விழா

Published On 2021-08-16 07:34 GMT   |   Update On 2021-08-16 07:34 GMT
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா 8-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா 8-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் உவரி மற்றும் அழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், வில்லிசை, திருவிளக்கு பூஜை, 2-ம் நாள் வில்லிசை, விநாயகர், முருகன், பெருமாள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், மஞ்சள் பெட்டி ஊர்வலம்,

3-ம் நாள் அழகம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல், கரகாட்டம், முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வருதல், 4-ம் நாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு சுமங்கலி பூஜை, உச்சிகால பூஜை, மாவிளக்கு பூஜை, அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வருதல், அம்மனுக்கு அலங்கார பூஜை, அம்மனுக்கு படைப்பு பூஜை, 5-ம் நாள் மங்கள இசை, சுவாமி உணவு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News