செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி இன்று தமிழகம் வருகிறது

Published On 2021-01-12 02:34 GMT   |   Update On 2021-01-12 04:45 GMT
கொரோனா தடுப்பூசி புனேவில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு நேற்று அளித்தது. ஒரு  கொரோனா தடுப்பூசியின் அடிப்படை விலை ரூ.200 ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை, மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியது.

புனேவில் இருந்து விமானங்கள் மூலம் நாடு முழுவதும் 13 இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா தடுப்பூசி புனேவில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News