உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செங்கோட்டையில் வேளாண்துறை சார்பில் சிறப்பு பிரசாரம்

Published On 2022-01-09 06:07 GMT   |   Update On 2022-01-09 06:07 GMT
செங்கோட்டையில் விவசாயிகள் பயிறு சாகுபடியை தீவிரப்படுத்துவதற்காக வேளாண் துறை சார்பில் சிறப்பு பிரசாரம் நடைபெற்றது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் அடைந்தனர்.
செங்கோட்டை:

தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாவட்டத்திலுள்ள வேளாண் துறை அலுவலர்களுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி பிசான நெல் அறுவடைக்கு பின் உளுந்து உள்ளிட்ட பயறு சாகுபடியை தீவிரப்படுத்த வேண்டி அதற்கான சிறப்பு முகாம்கள் பேரணிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா மாவட்ட கலெக்டரின் வேளாண்மைக்கான நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியம் தென்காசி மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்திற்கான ஆலோசகர் வெங்கடசுப்ரமணியம் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம் மாள் ஆகியோரின் அறிவுரையின் பேரில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் தலைமையில் தொழில்நுட்ப அலு வலர்கள் சிறப்பு முகாம்களை தொடங்கி யுள்ளனர்.

செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் பிரசார ஊர்தியில் வாயிலாக செங்கோட்டை வட்டாரத்தில் உள்ள விரைவில் அறுவடைக்கு தயாராகும் பகுதியான புளியரை மற்றும் பகவதிபுரம் தெற்கு மேடு புதூர் கேசவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

நெல் சாகுபடிக்கு பின்னர் பயறு வகை பயிர் சாகுபடி செய்வதால் குறைந்த நாளில் விவசாயிகளுக்கு ஒரு வருமானம் கிடைப்பதோடு மண்வளம் பேணிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உளுந்து போன்ற பயறு வகை பயிருக்கு மிகவும் குறைந்த செலவில் ஒரு மகசூலை எடுக்க தக்க பயிராக இருக்கின்றது.

செங் கோட்டை வட்டாரத்தில் பிசான பருவ நெல் அறுவடைக்கு பின்னர் ஆயிரம் ஏக்கரில் பயிறுவகை பயிர் சாகுபடி செய்ய குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
Tags:    

Similar News