ஆன்மிகம்
புனித அந்தோணியார்

கோகூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-07-21 05:00 GMT   |   Update On 2021-07-21 05:00 GMT
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கீழ்வேளூர் கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் 10 நாட்கள் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தளங்களில் விழா நடத்த அரசு தடை விதித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பங்கு தந்தை ஜான் பீட்டர் கொடியேற்றினார்.

கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News