உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் வசதியை சீரமைக்க கோரிக்கை

Published On 2022-01-11 09:52 GMT   |   Update On 2022-01-11 09:52 GMT
தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்குள்ள லிப்ட் பல மாதங்களாக இயங்காமல் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள், வெளி நோயாளிகள் என  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலை, திருச்செந்தூர் சாலை ஆகியவற்றில் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைபவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. 

புதிய கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. தரைதளம் உடைக்கப்பட்டு டைல்ஸ் எல்லாம் உடைக்கப்பட்டு காங்கீரிட் கூட உடைந்து போயிருக்கிறது. 

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் இயங்காமல் பல மாதங்களாக நோயாளிகள் அவதிப் படுகிறார்கள். இதனால் 5 மாடி படிகளில் இறங்குவதால் சோர்வடைகிறார்கள்.

  எனவே   லிப்ட் வசதியை உடனடியாக சீரமைக்க   விரைந்து  நடவடக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சி  மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் வலியுறுத்தி உள்ளார்.                                                                          
         
Tags:    

Similar News