செய்திகள்
இயக்குனர் ரஞ்சித்- கேஎன் நேரு

திருச்சியில் கல்வி உரிமை மாநாடு: கே.என்.நேரு- இயக்குனர் ரஞ்சித் பங்கேற்பு

Published On 2019-08-23 15:21 GMT   |   Update On 2019-08-23 15:21 GMT
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து திருச்சியில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் கே.என்.நேரு மற்றும் இயக்குனர் ரஞ்சித் பங்கேற்றனர்.
திருச்சி:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்வி கொள்கையை முழுவதும் திரும்ப பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. மாநாட்டிற்கு கவுரவ தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். செயல்தலைவர் கவிஞர் நந்தலாலா வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக வரவேற்புக்குழு மதிப்பு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன்ரெட்டி தொடக்க உரையாற்றினார். தேசிய கல்வி கொள்கையின் பின்னணி மர்மங்கள் உள்பட பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள், கல்வியாளர்கள் பேசினர். இந்திய மாணவர் சங்கம், ஜாக்டோ ஜியோ, எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

புதிய தேசிய கல்வி கொள்கையால் எதிர்கால சந்ததி பாதிக்கும் என்பதால் இதை முழுமையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தேசிய கல்வி கொள்கைக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே இது தொடர்பாக கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்போதைய கல்வி கொள்கை முற்றிலும் பாதிப்பதாக உள்ளது என்று கவுரவ தலைவர் தமிழ்செல்வன், செயல் தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News