செய்திகள்
கைது

தூத்துக்குடியில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் திருட்டு- தொழிலாளர்கள் 5 பேர் கைது

Published On 2021-10-08 09:24 GMT   |   Update On 2021-10-08 09:24 GMT
தூத்துக்குடியில் கட்டுமான பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புடைய ஒன்றரை டன் இரும்பு கம்பி நேற்று மாயமானது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). பில்டிங் காண்டிராக்டர். இவர் ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டுமான பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புடைய ஒன்றரை டன் இரும்பு கம்பி நேற்று மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காடனேரி பகுதியைச் சேர்ந்த சகோதர்களான தெய்வம் (37), கருப்பையா (43) மற்றும் பாலாமணி (37), ஈஸ்வரன் (24), முத்துக்குமார் (22) ஆகிய 5 பேரும் இரும்புக் கம்பியை திருடியதாக சரவணன் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கம்பியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News