தொழில்நுட்பம்
நோக்கியா 8.3 5ஜி

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-05-25 05:51 GMT   |   Update On 2020-05-25 05:51 GMT
நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.



நோக்கியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலான நோக்கியா 8.3 5ஜி மார்ச் மாதம் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வெளியீட்டு விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது.

இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.



நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்

- 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு 10

ஐரோப்பாவில் இதன் விலை 599 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 49,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News