ஆன்மிகம்
செய்யாறு அருகே காசிவிசுவநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழுந்த அதிசயம்

செய்யாறு அருகே காசிவிசுவநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழுந்த அதிசயம்

Published On 2020-09-18 04:57 GMT   |   Update On 2020-09-18 04:57 GMT
செய்யாறு அருகே காசிவிசுவநாதர் கோவிலில் மூலவர் காசிவிசுவநாதர் மீது சூரியகதிர்கள் விழும் அதிசய நிகழ்ச்சி நடந்தது. இந்த அதிசயத்தைப் பார்த்து கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் பலர் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று மூலவர் காசிவிசுவநாதர் மீது காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரியகதிர்கள் விழுவது வழக்கம்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று காலை சூரியகதிர்கள் மூலவர் காசிவிசுவநாதர் மீது விழும் அதிசய நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணியளவில் மூலவர் மீது சூரிய கதிர்கள் விழுந்த அதிசயத்தைப் பார்த்து கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் பலர் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். அதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News