விளையாட்டு
மாநில கூடைப்பந்து போட்டி

50 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

Published On 2022-05-07 08:51 GMT   |   Update On 2022-05-07 08:51 GMT
18 வது மின்னொளி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இன்று தொடங்குகிறது.
சென்னை:

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 18 வது மின்னொளி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூர் வெங்குபிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 14 ந் தேதி வரை 8 நாட்கள் இந்தப்போட்டி நடக்கிறது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க், துறைமுகம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், சத்யபாமா, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், லயோலா உள்பட 40 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், சங்கம், நேஷனல், எத்திராஜ் கல்லூரி உள்பட 10 அணிகளும் பங்கேற்கின்றன.

நாக்அவுட் மற்றும் லீக் முறையில் மாலை 3.30 மணி முதல் இரவு வரை போட்டி நடைபெறும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்படும். பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி பரிசுத்தொகைக்கு ஸ்பான்சர் செய்கிறது.

இன்று மாலை இந்தப் போட்டியை கவுதம் சிகாமணி எம்.பி, சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ஏ.எம் செல்வராஜ், கே.எத்திராஜ் யாதவ், மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ. கே. கோபி, செயலாளர் எம்.கனகசுந்தரம், துணைத்தலைவர் எஸ்.எஸ்.குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News