செய்திகள்
விபத்தில் சிக்கிய ரெயில்

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு

Published On 2021-04-02 05:51 GMT   |   Update On 2021-04-02 05:51 GMT
தைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தைபே:

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. 

திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.



இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. 

தடம்புரண்ட ரெயிலுக்கு அருகில் லாரியின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லாரி மீது மோதியதால் ரெயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரெயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

Tags:    

Similar News