செய்திகள்
சென்னை செம்மஞ்சேரி ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபோது எடுத்த படம்

வடிய மறுக்கும் வெள்ளநீர்- 684 மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றம்

Published On 2021-11-29 03:49 GMT   |   Update On 2021-11-29 03:49 GMT
தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி இறைக்கப்பட்டு காலி இடங்கள், மழைநீர் வடிகால்வாய் போன்ற இடங்களில் விடப்பட்டு வருகின்றன.
சென்னை:

சென்னையில் பெய்த பெருமழையால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிக்கு சொந்தமான 448 மோட்டார் பம்புகளும், வாடகை மோட்டார் பம்புகள் 199-ம், பிற துறைகளுக்கு சொந்தமான 37 மோட்டார் பம்புகளும் என 684 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக குதிரைத்திறன் கொண்ட இந்த மோட்டார் பம்புகளும் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றன.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி இறைக்கப்பட்டு காலி இடங்கள், மழைநீர் வடிகால்வாய் போன்ற இடங்களில் விடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஒரு இடங்களில் தண்ணீர் முற்றிலும் வடிந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது.

வடிய மறுக்கும் மழைவெள்ளநீரை வெளியேற்றும் பணி இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News