உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் பெட்டிக்கடைகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிய மாநகராட்சி பணியாளர்கள்.

திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2021-12-04 09:42 GMT   |   Update On 2021-12-04 09:42 GMT
சிலர் பெட்டிக்கடைகள், பழக்கடைகள்,செருப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்  கீழ் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. பஸ்கள் நிறுத்துவதற்காக அங்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

மேலும் அப்பகுதியில் சிலர் பெட்டிக்கடைகள், பழக்கடைகள்,செருப்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி பணியாளர்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த பெட்டிக்கடைகள் மற்றும் வியாபார கடைகளை அங்கிருந்து அகற்றினர். இதனால்அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  
Tags:    

Similar News