தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்

Published On 2021-03-02 09:38 GMT   |   Update On 2021-03-02 10:52 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது. புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

புதிய லைவ் ரூம்ஸ் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதுவரை நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 



"முன்னதாக ஸ்டிரீம் செய்யும் போது ஒருவரை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்போது நேரலையில் நாங்கள் இதனை இருமடங்கு அதிகரிக்கிறோம்," என இன்ஸ்டாகிராம் தனது வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளது. 

"நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும் - இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News