தொழில்நுட்பம்
டைவா ஸ்மார்ட் டிவி

பட்ஜெட் விலையில் டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-12-26 05:03 GMT   |   Update On 2020-12-26 05:03 GMT
டைவா நிறுவனத்தின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


இந்தியாவை சேர்ந்த மின்சாதன உற்பத்தியாளரான டைவா 43 இன்ச் அளவில் D43QFS ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவியில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் பில்ட் இன், தி பிக் வால் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதில் உள்ள பில்ட் இன் அலெக்சா மூலம் பயனர்கள் புதிய திரைப்படங்கள் அல்லது நினைவூட்டல் போன்ற அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டு அலெக்சா சார்ந்த ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கலாம்.



புதிய டைவா ஸ்மார்ட் டிவி ஏ53 குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 8 இயங்குதளம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு உள்ளது. இது டைவா நிறுவனத்தின் சொந்த யுஐ ஆகும்.

இந்த யுஐ 25000000+க்கும் அதிக மணி நேரங்களுக்கான தரவுகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இரோஸ் நௌ, வூட், அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து வழங்குகிறது. 43 இன்ச் புல் ஹெச்டி பேனல் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் டைவா D43QFS ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 24,490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை அனைத்து சில்லறை விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News