ஆன்மிகம்
ஜம்புகேஸ்வரர்

ஜம்புகேஸ்வரர் கோவிலில் நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-08-13 03:21 GMT   |   Update On 2021-08-13 03:21 GMT
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. இந்த மரத்தடியில் நாகசாமி உள்ளது. நேற்று மாலை நாகசதுர்த்தியையொட்டி இங்குள்ள நாவல் மரத்தடி நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது.

இதேபோல செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நாகராஜா சாமிக்கு நாகசதுர்த்தி விழா நடைபெற்றது.
Tags:    

Similar News