செய்திகள்
பாராளுமன்றம்

பெகாசஸ் பிரச்சினை- பாராளுமன்ற இரு அவைகளும் 14வது நாளாக முடக்கம்

Published On 2021-08-06 08:54 GMT   |   Update On 2021-08-06 10:23 GMT
பாராளுமன்ற கூட்டத்தொடரின் 14-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சினையை எழுப்பின.
புதுடெல்லி:

பெகாசஸ் பிரச்சினையை எழுப்பி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

கடந்த 19-ந் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை சபை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. தினமும் இந்த பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் சபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று 14-வது நாளாக நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சினையை எழுப்பின.

இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் அமளியை கைவிடவில்லை. இதனால் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

தினமும் சபை நடவடிக்கைகள் குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடக்கிறது. மத்திய அரசின் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. மற்ற விவாதங்கள் எதுவும் நடைபெறாமல் பாராளுமன்ற பணிகள் முற்றிலும் முடங்கி இருக்கின்றன.


Tags:    

Similar News