செய்திகள்
பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு 6-வது முறையாக பரோல் நீட்டிப்பு

Published On 2021-10-26 08:28 GMT   |   Update On 2021-10-26 08:28 GMT
விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.

அதன்பேரில் கடந்த மே மாதம் 28-ந்தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து 5 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் பேரறிவாளனின் பரோல் நிறைவடைந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் 6-வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

6-வது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து, பேரறிவாளன் அவரின் வீட்டில் இருந்து வருகிறார்.

பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News