வழிபாடு
உடலில் சேறு பூசி வழிபாடு செய்த பக்தர்கள்.

கமுதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: உடலில் சேறு பூசி அங்கப்பிரதட்சனம் செய்த பக்தர்கள்

Published On 2022-03-23 06:47 GMT   |   Update On 2022-03-23 06:47 GMT
கமுதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று (23-ந்தேதி) அக்கினி சட்டி திருவிழா நடைபெறுகிறது. தினமும் இரவு முத்துமாரியம்மன் கோவில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குதிரை, யானை, காமதேனு, ரி‌ஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கோவிலின் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று (23-ந்தேதி) அக்கினி சட்டி திருவிழா நடைபெறுகிறது. தினமும் இரவு முத்துமாரியம்மன் கோவில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் திருவிழாவை கணக்கிட்டுதான் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலையில் திரளான பக்தர்கள் உடலில் சேறு பூசி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சேத்தாண்டி வேடம் அணிந்து அங்கபிரதட்சனம் செய்தனர்.
Tags:    

Similar News