உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

நடைபயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2022-04-15 08:45 GMT   |   Update On 2022-04-15 08:45 GMT
மணப்பாறையில் நடை பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
திருச்சி:

நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரோந்து பணியை அதிகரிப்பது, சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தி கண்காணிப்பது  போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் ஆங்காங்கே இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. 

இதைப்போல் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமானுஜம்மாள் (வயது 67). உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இவர் தினமும் காலையில் வீட்டின் அருகே நடப்பது வழக்கம். 

இதே போல் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதும் அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென ராமானுஜம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி தங்க சங்கிலியை பறித்து கொண்டு சென்றனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியவர்களை தேடிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News