தொழில்நுட்பச் செய்திகள்
மெட்டாவெர்ஸ்

குழந்தைகள் கற்கவும், விளையாடவும் உதவும் மெட்டாவெர்ஸ்

Published On 2022-04-09 06:25 GMT   |   Update On 2022-04-09 06:25 GMT
குழந்தைகளின் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான லெகோவும், ஃபோர்ட்னைட் என்ற பிரபல கேமை தயாரித்த எபிக் கேம்ஸ் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்காக மெட்டாவெர்ஸை உருவாக்குகின்றன.
மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் மெட்டாவெர்ஸை நோக்கி நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கிவிட்டன.

ஏற்கனவே மெக்டோனல்ட்ஸ், ஹெச்.எஸ்.பி.சி வங்கி போன்ற நிறுவனங்கள் மெட்டாவெர்ஸில் தங்களுடைய நிறுவனங்களை தொடங்கிவிட்டன. இதுத்தவிர பிறந்தநாள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கூட மெட்டாவெர்ஸில் நடைபெறுகிறது. 

திரைப்படங்கள் கூட மெட்டா வெர்ஸில் தங்களுடைய கதாபாத்திரங்கள் தொடர்பான உலகை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டு கெமிங் நிறுவனங்கள் இணைந்து மெட்டாவெர்ஸில் குழந்தைகளுக்காக விளையாட்டுகளை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

குழந்தைகளின் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனமான லெகோவும், ஃபோர்ட்னைட் என்ற பிரபல கேமை தயாரித்த எபிக் கேம்ஸ் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்காக மெட்டாவெர்ஸை உருவாக்குகின்றன.

இதுகுறித்து அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை சிறந்த படைப்பாளிகளாக மாற்றவும், பாதுகாப்பாக விளையாடவும் ஏற்றவகையில் இந்த மெட்டாவெர்ஸ் உருவாக்கப்படும். அவர்கள் இதில் நிறைய கற்றுகொள்வதோடு, பிறரோடு தகவல் பரிமாறவும் சிறப்பாக பயிற்சி பெறுவர்.

குழந்தைகளின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளின் தனியுரிமையும், அவர்களுடைய ஆர்வத்திற்கு முக்கியத்துவம் தரப்படும். டிஜிட்டல் அனுபவத்தை குழந்தைகளும், வளரும் பருவத்தினரும் சிறப்பாக கையாளும் வகையில் இந்த கருவி இருக்கும் என தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News