செய்திகள்
நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தால் பாதிப்பு இல்லை- நிர்மலா சீதாராமன் பேச்சு

Published On 2020-01-19 10:36 GMT   |   Update On 2020-01-19 10:36 GMT
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை தியாகராய நகரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கூட்டத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

நமது நாட்டில் குடியுரிமை சட்டம் என்பது 1995 முதல் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் எந்த பிரச்சினையும் இல்லை.

குடியுரிமை என்பது யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல. உரிமையை கொடுப்பதுதான். இலங்கை உள்பட பல நாடுகளில் இருந்து வந்து முகாம்களில் அடைந்து கிடப்பவர்களை பார்த்தால் வேதனையாக உள்ளது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்காதீர்கள்.

யாருடைய குடியுரிமை பறிபோகும் என்று கூறுகிறார்களோ அவர்களிடம் உண்மையை விளக்க தயாராக இருக்கிறோம். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News