ஆன்மிகம்
காவிரிக்கரையில் தர்ப்பணம்

இன்று புரட்டாசி அமாவாசை: காவிரிக்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை

Published On 2020-10-16 03:45 GMT   |   Update On 2020-10-16 03:45 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிப்பதாக அறிவிக்காத காரணத்தால் அம்மா மண்டபம் படித்துறையில் இன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என புரோகிதர்கள் அறிவித்துள்ளனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய தினங்களில் கடல் மற்றும் நீர்நிலைகளில், இறந்த முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது இந்துக்கள் மத்தியில் ஐதீகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) புரட்டாசி அமாவாசை என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் தர்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் நேற்று இரவு வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகமோ, மாநகர காவல்துறையோ அறிவிக்கவில்லை. இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் இன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என புரோகிதர்கள் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News