செய்திகள்
தைவான் அதிபர் சாய் இங்-வென்

திடீர் பயணம்... தைவான் அதிபருடன் அமெரிக்க எம்.பி.க்கள் சந்திப்பு

Published On 2021-11-26 08:13 GMT   |   Update On 2021-11-26 08:13 GMT
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனநாயக உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும்படி தைவான் அரசுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தைபே:

தைவான்-சீனா இடையிலான மோதல் நீடித்து வருகிறது. தைவானை இணைப்பதில் சீன அரசும், சீனாவுக்கு அடிபணிய மாட்டோம் என தைவானும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன. தைவான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீன அரசு, ஊடுருவி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பையும் பதற்றத்தையும் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 5 எம்பிக்கள் திடீர் பயணமாக நேற்று தைவான் வந்தனர். இன்று காலையில் தைவான் அதிபரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தைவானுடனான அமெரிக்க உறவு மிகவும் வலுவானது மற்றும் உறுதியானது என தைவான் வந்துள்ள அமெரிக்க எம்பிக்களில் ஒருவரான மார்க் டகானோ கூறி உள்ளர். 

இந்த ஆண்டில் அமெரிக்க எம்பிக்கள் தைவானுக்கு மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தைவான் திணறியபோது, தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்காக அமெரிக்க எம்பிக்கள் தைவான் வந்தனர். 

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனநாயக உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும்படி தைவான் அரசுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News