செய்திகள்
கனிமொழி

திமுக எம்.பி. கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Published On 2020-10-06 04:10 GMT   |   Update On 2020-10-06 04:10 GMT
திமுக எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் ஒளியேந்தி மகளிர் அணி சார்பில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நோக்கி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. அதற்காக சென்னை சின்னமலை, ராஜீவ்காந்தி சிலை அருகே தி.மு.க. மகளிர் அணியினர் திரண்டனர்.

‘நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும்’ என்ற முழக்கத்துடன் பேரணி தொடங்கியது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். பேரணி, கனிமொழி எம்.பி. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி சென்றது.

பேரணி கவர்னர் மாளிகையை நோக்கி சிறிது தூரம் சென்றதும் போலீசார் இரும்பு தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்பு வேலியை தாண்டி கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். பேரணியில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல்,  சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News