ஆன்மிகம்
எட்டுக்குடியில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

எட்டுக்குடியில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-09-09 05:28 GMT   |   Update On 2020-09-09 05:28 GMT
எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் சாமிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள்பொடி எண்ணெய், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர்.

நேற்று கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கிருமிநாசினி தெளித்து கையை சுத்தம் செய்து உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சாமிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள்பொடி எண்ணெய், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News