ஆட்டோமொபைல்
டாடா கார்

கார்களை அந்த வசதியுடன் அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

Published On 2021-04-16 08:51 GMT   |   Update On 2021-04-16 08:51 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கார் மாடல்களில் அந்த வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி வசதியை வழங்க இருக்கிறது. எந்தெந்த மாடல்களில் சிஎன்ஜி வசதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், டியாகோ, டிகோர் மாடல்கள் சிஎன்ஜி மையங்களில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இரு ப்ரோடோடைப்களும் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதையொட்டி சமீப காலங்களில் சிஎன்ஜி மாடல்கள் சிறந்த மாற்றாக மாறி வருகின்றன. 



ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் சிஎன்ஜி வசதியை வழங்கி வருகின்றன. இந்திய சந்தையில் பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎன்ஜி வசதி அறிமுகம் செய்யும் பட்சத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் சிஎன்ஜி கிட் பொருத்த சிறந்த தேர்வாக இருக்கும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
Tags:    

Similar News