செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் எகிறிய காய்கறிகள் விலை - இல்லத்தரசிகள் கவலை

Published On 2021-11-23 07:12 GMT   |   Update On 2021-11-23 07:12 GMT
வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி கிலோ ரூ.15 முதல், 20க்கு விற்றுவந்தது. தற்போது முள்ளங்கி கிலோ ரூ. 40க்கு விற்பனையாகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் தக்காளி விலை 3 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து தற்போது கிலோ ரூ.150ஐ எட்டியுள்ளது. தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் ரூ.70க்கு விற்கும் பீன்ஸ் ரூ.90க்கும் விற்கப்படுகிறது.

வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி கிலோ ரூ.15 முதல், 20க்கு விற்றுவந்தது. தற்போது முள்ளங்கி கிலோ ரூ. 40க்கு விற்பனையாகிறது. பாகற்காய் ரூ.60, பீர்க்கன் ரூ.70, கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25, கறிவேப்பிலை ரூ.10க்கு விற்கிறது.  

கீரை விலையும் உயர்ந்து சந்தையில் ஒரு கட்டு கீரை ரூ.6 முதல்ரூ.7 வரை விற்கப்படுகிறது. உழவர் சந்தை வெளி மைதானத்தில் தக்காளி விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் திரண்டு விற்பனை செய்வர். வரத்து குறைவால் 15 விவசாயிகள் மட்டுமே தக்காளி விற்பனை செய்தனர். 

இதனால் கிராக்கி நிலவி விலை உயர்ந்தது. தக்காளியை தொடர்ந்து பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

ஆனி, ஆடியில் பெய்ய வேண்டிய மழை ஐப்பசி, கார்த்திகையில் பருவம் தவறி பெய்கிறது. காடுகளுக்குள் வற்றாமல் தண்ணீர் நிற்பதால் செடிகள் அழுகி விடுகின்றன. மழை பெய்து கொண்டே இருப்பதால், காய்ப்பு பருவத்துக்கு வந்த பின் காய் பிடிக்காமல் தடைப்பட்டு விடுகிறது.

குறிப்பாக தக்காளியை செடிகளில் பறித்து அடுக்கி சந்தைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் பாதி சேதமாகி விடுகிறது. மழை நின்று ஒரு வாரத்துக்கு பின்பே விலையில் மாற்றம் வரும் என்றனர்.
Tags:    

Similar News