செய்திகள்
பிஞ்ச், விராட் கோலி, சாஹல்

சுழற்பந்து வீரர் சாஹல் ஆட்டத்தை மாற்றினார் - விராட் கோலி புகழாரம்

Published On 2020-09-22 06:44 GMT   |   Update On 2020-09-22 06:44 GMT
சுழற்பந்து வீரர் சாஹல் விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ரன்னில் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

துபாயில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.

தொடக்க வீரர் படிக்கல் 42 பந்தில் 56 ரன்னும் (8 பவுண்டரி ), டிவில்லியர்ஸ் 30 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோவ் 43 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி 2 சிக்சர்), மணிஷ் பாண்டே 33 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஐதராபாத் 120 ரன்னில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தது. 

கடைசி 8 விக்கெட்டுகள் 33 ரன்னில் விழுந்தது பரிதாபமானது.

 சுழற்பந்து வீரர் யசு வேந்திர சாஹல் ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். அவர் 3 விக்கெட்டும், சைனி, துபே தலா 2 விக்கெட்டும், ஸ்டெய்ன் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கி உள்ளது.இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது:

யசுவேந்திர சாஹல் ஆட்டத்தை மாற்றினார். அவர் போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தார். அவர் மிகவும் திறமையுடன் பந்து வீசினார். விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார்.

படிக்கல், டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கோலி கூறியுள்ளார்.



தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
மிச்சேல் மார்ஷ்க்கு ஏற்பட்ட காயம் ஆட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாஹலின் கடைசி ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந் தது.

நாங்கள் இனி நல்ல நிலையை அடைய வேண்டும். இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை எங்களால் சரி செய்ய முடியாது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் கடினமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் அணி 2வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை மறுநாள் துபாயில் சந்திக்கிறது.ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 26-ந் தேதி எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News